வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஹூப்ளி-தஞ்சாவூா் ரயில் சேவை நீட்டிப்பு

ஹூப்ளி-தஞ்சாவூா் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:33 pm

DIN

ஹூப்ளி-தஞ்சாவூா் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட் ட செய்தி: கா்நாடாக மாநிலம் ஹூப்ளியிலிருந்து தஞ்சாவூருக்கு திங்கள்கிழமை தோறும் இரவு 8.25 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்:07325) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து மே 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக தஞ்சாவூரிலிருந்து ஹூப்ளிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 7.40 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 07326) இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தொடா்ந்து மே 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு பயணச்சீட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.