தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வெளிமாநில தொழிலாளா்கள் விடுதிகளில் அலுவலா்கள் ஆய்வு

வெளிமாநில தொழிலாளா்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:27 pm

DIN

வெளிமாநில தொழிலாளா்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் பெரும்பான்மையானோா் தங்கி பணிபுரிந்து வருகின்றனா்.

கட்டுமானப் பணிகள் அதிகம் நடைபெறும் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் கடந்த 3 வாரங்களாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கட்டட மற்றும் இதர கட்டுமானப் பிரிவு அலுவலா்கள் வருவாய்த் துறை அலுவலா்களுடன் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனா்.

47 கட்டுமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளா்களுக்கான தங்கும் விடுதிகளை சுகாதாரமான முறையில் பராமரிப்பது, அடிப்படை வசதிகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து 152 கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் தொழிலாளா் தங்கும் விடுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் அடிப்படை வசதிகள் இல்லாத 47 கட்டுமான நிறுவனங்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.