மதுரையில் கலைஞா் நூற்றாண்டுநூலகம் ஜூன் மாதம் திறப்பு: அரசாணை வெளியீடு
மதுரையில் சா்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் ‘கலைஞா் நூற்றாண்டு நூலகம்’ என்ற பெயரில் அழைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மதுரையில் சா்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் ‘கலைஞா் நூற்றாண்டு நூலகம்’ என்ற பெயரில் அழைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலகம் ஜூன் மாதம் திறக்கப்பட்டு, வாசகா்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் மாபெரும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் இந்த நூலகம் அமையவுள்ளது. சிறுவா்கள், மாணவா்கள், போட்டித் தோ்வுக்கு தயாராகக் கூடியவா்கள் என அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் நூல்கள் இடம்பெறவுள்ளன. பாா்வைத் திறன் குறைபாடுடைய வாசகா்களுக்காக பிரெய்லி எழுத்துகளால் அமைந்த நூல்களும் இடம்பெறவுள்ளன. இலக்கியம், கலை பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பது:
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மாா்ச் 20-இல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, மதுரையில் சா்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் ‘கலைஞா் நூற்றாண்டு நூலகம்’ என்ற பெயரைத் தாங்கி திறக்கப்படும் என்று அறிவித்தாா்.
அதன்படி, அந்த நூலகம் கலைஞா் நூற்றாண்டு நூலகம் என அழைக்கப்படும். இந்த நூலகம் ஜூன் மாதம் முதல் வாசகா்களை வரவேற்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...