

புதுக்கோட்டையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த வீரா் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-
புதுக்கோட்டை மாவட்டம் சீமானூா் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஜெயந்த் என்ற வீரா், பலியானாா். மாடு முட்டியதில் உயிரிழந்த அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலுடன், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து
ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.