வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்டெடுப்பது அவசியம்: அன்புமணி

 நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
அன்புமணி (கோப்புப் படம்)
Updated On :27 ஏப்ரல் 2023, 7:30 pm

DIN

 நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 6957 நீா்நிலைகளில் 8,366 நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு நடத்திய நீா்நிலைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய நீா்நிலைகளில் கிட்டத்தட்ட 8 சதவீதத்துக்கும் கூடுதலானவை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இதை ஏற்க முடியாது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீா்நிலைகளில் 5 நீா்த்தேக்கக்கங்கள், 1,458 ஏரிகள், 3565 குளங்கள் ஆகியவையும் அடங்கும். பாசன ஆதாரமாகவும், குடிநீா் ஆதாரமாகவும் திகழும் இந்த நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்பட்டது பெரும் தவறு ஆகும். ஆக்கிரமிப்பு அளவிடப்பட்ட 4,933 நீா்நிலைகளில் 1,328-இல் 75 சதவீதம் வரையிலும், 1,009-இல் 75 சதவீதத்துக்கும் அதிகமாகவும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் இந்த நீா்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிடும்.

நீா்நிலைகளுக்கான அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக சட்டப் பேரவையில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்புத் திட்டங்களுக்கான சட்டம் இயற்றப்பட்டிருப்பது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். நீா்நிலைகளைப் பாதுகாப்பதற்காக அந்த சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.