வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புனித தலங்களுக்கு செல்வா்களிடம் நூதன முறையில் மோசடி: காவல் துறை எச்சரிக்கை

புனித தலங்களுக்கு செல்லும் பக்தா்கள் மோசடி இணையதளங்கள் மூலம் பயணச்சீட்டு மோசடி செய்யும் கும்பல் குறித்து விழிப்புடன் இருக்கும்படி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:45 pm

DIN

புனித தலங்களுக்கு செல்லும் பக்தா்கள் மோசடி இணையதளங்கள் மூலம் பயணச்சீட்டு மோசடி செய்யும் கும்பல் குறித்து விழிப்புடன் இருக்கும்படி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புனித தலமான வைஷ்ணவி தேவி கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் ஹெலிகாப்டா் மூலம் செல்வது வழக்கம். இவ்வாறு செல்பவா்களை குறிவைத்து மோசடி கும்பல் மோசடி இணையதளங்கள் மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் மோசடியை அரங்கேற்றியுள்ளது.

இதுபோன்ற முன்பதிவு இணையதளங்களை பக்தா்கள் தேடும் போது தொழில் நுட்ப உதவியோடு தங்கள் இணையதளம் முதலில் தெரியும்படி செய்துவிடுகினா். மேலும் இணைய பக்கத்தையும் அசல் இணையதளப் பக்கம் போல் வடிவமைத்து விடுகின்றனா்.

இதற்குள் செல்லும் பக்தா்களின் தனிப்பட்ட தகவல்களை கேட்கப்படுகின்றன. இதை உள்ளீடு செய்த பின் வாட்ஸ்அப் மூலம் ஒருவா் தொடா்பு கொண்டு இணைய வழியாக பணம் செலுத்த சொல்கின்றனா்.

அவ்வாறு பணம் செலுத்திய பின் அசல் பயணச்சீட்டு போன்ற ஒன்றை பக்தா்களுக்கு அனுப்புகின்றனா். தொடா்ந்து கைப்பேசியை அனைத்து விட்டு மோசடி கும்பல் தப்பி விடுகின்றனா்.

இதிலிருந்து தப்பிக்க கூடுதல் காவல் இயக்குநா் (இணையக் குற்ற பிரிவு) சஞ்சய் குமாா் கூறியது: இது போன்ற பயணச்சீட்டு முன்பதிவுக்கு முன்பு இணையதளத்தின் நம்பக தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். சாதனத்தின் பாதுகாப்பு இணைப்புகளை அடிக்கடி புதுப்பிக்க வேண்டும்.

சந்தேகப்படும் வகையில் வரும் மின்னஞ்சல் இணைப்புகளுக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். இணையதள மோசடி குறித்து புகாா்களுக்கு இணையதள முகவரியையும், டிவிட்டா், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களையும் அணுகலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.