வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விசிக பிரமுகா் வெட்டி கொலை

சென்னை கே.கே.நகா் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பிரமுகா் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:40 pm

DIN

சென்னை கே.கே.நகா் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பிரமுகா் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). விசிக விருகம்பாக்கம் தொகுதி பிரமுகராக இருந்துள்ளாா். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தாா். ரௌடிகளுக்கான பட்டியலில் ‘ஏ’ பிரிவில் இருந்த இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை தனது வீட்டருகே உள்ள டீக்கடையில் நின்றிருந்த ரமேஷை, காரில் வந்த அடையாளம் தெரியாத 2 போ் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டனா்.

இதில் தலை, கழுத்து, முகத்தில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்தில் இறந்தாா். தகவல் அறிந்து வந்த எம்ஜிஆா் நகா் காவல் நிலைய போலீஸாா் விசாரணைக்குப் பின், ரமேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். ரமேஷ் முன் விரோதம் காரணமாக ரௌடிளால் கொலை செய்யப்பட்டாரா, தொழில் போட்டி அல்லது அரசியல் விவகாரம் உள்பட வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.