வளையமாதேவிக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் தடுத்து நிறுத்தம்

வளையமாதேவிக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்திற்கு செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர்.
சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்திற்கு செல்ல முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர்.

சிதம்பரம்:  வளையமாதேவிக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

என்எல்சி இந்தியா நிறுவனம் விவசாயிகளின் நெற்பயிரை அழித்து வாய்க்கால் அமைக்கப்பட்டு வரும் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்திற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, சின்னதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ் ஜி ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், தேன்மொழி ஆகியோர் விவசாயிகளை சந்திக்க செவ்வாய்க்கிழமை காலை சென்ற போது சேத்தியாதோப்பு கூட்டு ரோடு அருகே டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையிலான காவல் துறையினர் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். 

பின்னர், இதனை கண்டித்து மார்க்சிஸ்ட். கம்யூ கட்சி நிர்வாகிகள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.  விவசாய சங்க மாவட்ட செயலாளர் சரவணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், புவனகிரி ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்,  கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் செல்லையா, குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com