ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோயிலில் கால் நாட்டுடன் தொடங்கியது!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சொரிமுத்து அய்யனார் கோயிலில் கால் நாட்டு நிகழ்ச்சியுடன் 10 நாள் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது. 
ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோயிலில் கால் நாட்டுடன் தொடங்கியது!
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சொரிமுத்து அய்யனார் கோயிலில் கால் நாட்டு நிகழ்ச்சியுடன் 10 நாள் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது. 

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வர். 

இந்த ஆண்டு ஆக. 16ல் ஆடி அமாவாசை வருவதையடுத்து, இன்று கால் நாட்டுடன் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது. கால் நாட்டு நிகழ்ச்சி அய்யனார் கோயில் பரம்பரை அறங்காவலர் சங்கர் ஆத்மஜன் தலைமையில் கால்நாட்டு நடைபெற்றது. 

முன்னதாக கால் நாட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர், இசக்கியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. 

கால் நாட்டைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி 10 நாள் விரதத்தைத் தொடங்கினர். மேலும் விரதம் இருக்கும் பக்தர்கள் கோயில் அருகே உள்ள பகுதிகளில் குடில்கள் அமைத்து தங்கி விரதம் இருந்து ஆடி அமாவாசை அன்று தங்கள் விரதத்தை நிறைவேற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர். 

கால் நாட்டு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் முருகன், கோயில் பணியாளர்கள் பசுபதி, சட்டநாதன், காந்திமதி நாதன், ராக்கமுத்து, முருகதாஸ் மற்றும் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com