பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ரூ.12.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 5 விடுதிக் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில்,
தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பினரின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவதை சிறப்பு நோக்கமாகக் கொண்டு பல்வேறு முனைப்பான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அம்மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிட கல்வி உதவித் தொகை வழங்குதல், புதிய பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், 3 கோடியே 69 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;
கடலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், ரூ.2.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவியர் விடுதிக் கட்டடம்;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், ரூ.2.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக்கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்;
தஞ்சாவூரில் 100 மாணவர்கள் தங்கும் வசதியுடன், ரூ.2.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடம்;
மதுரை மாவட்டம், மேலூரில் 100 மாணவியர் தங்கும் வசதியுடன், ரூ.2.11 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;
என மொத்தம் ரூ.12.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிக் கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் அணில் மேஷ்ராம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் வா. சம்பத், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறப்புச் செயலாளர் ஹனீஷ் சாப்ரா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


