பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாளை(ஆக. 11) முதல் மஞ்சள் நிறப் பேருந்துகளின் சேவை! முதல்வர் தொடக்கிவைக்கிறார்

புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற அரசுப் பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு நாளை (ஆக. 11) தொடக்கி வைக்கிறார். 

News image
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :10 ஆகஸ்ட் 2023, 10:18 am

DIN

புதுப்பிக்கப்பட்ட மஞ்சள் நிற அரசுப் பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு நாளை (ஆக. 11) தொடக்கி வைக்கிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பச்சை நிறத்தில் இயக்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், பிஎஸ் 4 ரக தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதைத் தொடா்ந்து நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன.

அதன்படி, தமிழகத்தில் தற்போது புறநகர் செல்லும் புதிய பேருந்துகள் நீல நிறத்திலும், நகர, மாநகரப் பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன. பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளின் முன், பின் பக்கங்கள் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. 

அதன்படி, அடிச்சட்டம் நல்ல நிலையில் இயக்கத்திலுள்ள பேருந்துகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவையும் விரிவாக வசதியாக இருக்கும்படி மாற்றப்பட்டுள்ளது. 

அதன்படி மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் சேவையை நாளை(ஆக. 11) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறார். முதல் கட்டமாக 100 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.