
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கிராமத்தில் வசித்து வந்த எழுத்தாளர் கவிஞர் வாய்மைநாதன்(86) இன்று (ஆக. 11) காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர் கவிஞர் வாய்மைநாதன். மரபு கவிதையில் பல்வேறு படைப்புகளை எழுதியவர்.
இவர்,1986-ல் எழுதி வெளியான நேதாஜி காவியம் தமிழ்வளர்ச்சித் துறையின் நிதி உதவியை பெற்றது. இந்த காவியம் இந்தி மொழியில் வாங்க்காசிங்க் (1999) என்ற தலைப்பில் வெளியாகியது.
2008-ல் வெளியான கப்பலுக்கொரு காவியம் (வ.உ.சி வரலாறு) அந்த ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசுக்கு தேர்வானது.
மதுரை வீரன்(கவிதை நாடகம்), புதிய மனிதன் (சிறுகதைத் தொகுப்பு), தியாகி களப்பால் குப்பு(வாழ்க்கை வரலாறு), வெண்மணிக் காப்பியம், நாலி புதினம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். இவருக்கு வேளாண்துறையில் பணியாற்றும் ஜீவானந்தம், சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் முருகபாரதி ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இவரது இறுதி சடங்குகள் வாய்மேடு கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஆக.11) மாலை 4 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







