அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகிற ஆகஸ்ட் 25 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் அமலாக்கத் துறை காவலில் எடுப்பதற்கு எதிராக அமைச்சா் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் செந்தில் பாலாஜியை 5 நாள்கள்(ஆக. 12 வரை) அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிப்பதற்கு கடந்த திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
பின்னர் அமலாக்கத்துறை அளித்த மனு தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜியை 5 நாள்கள்(ஆக. 12 வரை) காவலில் எடுக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து, செந்தில் பாலாஜி இன்று(சனிக்கிழமை) சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, மேலும் 5 நாள்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிபதி மறுத்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பான 3,000 பக்க குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது, குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பனப்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளிக்கு பசுமை சாம்பியன் விருது: ஆட்சியா் பாராட்டு

பாரபட்சமின்றி பட்டா வழங்கக் கோரி கோவில்பட்டியில் மக்கள் போராட்டம்

சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மெய்நிகா் மாதிரி செயலி அறிமுகம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

