தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல்: ஆக.14ல் இறுதி வாக்காளர் பட்டியல்

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 14ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 
தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல்: ஆக.14ல் இறுதி வாக்காளர் பட்டியல்
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு வக்ஃப் வாரிய முத்தவல்லிகளுக்கான தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 14ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிப்போருக்கான முத்தவல்லிகள் பிரிவிற்கு இறுதி வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 14.08.2023 அன்று வெளியிடப்படுகிறது. இவ்வாக்காளர் பட்டியல், தேர்தல் அதிகாரி/ஆணையர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அலுவலகம், சேப்பாக்கம், சென்னை-600 005, முதன்மைச் செயல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வக்ஃப் வாரியம், எண்.1, ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600 001, அனைத்து மண்டல வக்ஃப் கண்காணிப்பாளர்களின் அலுவலகங்கள் (11 மண்டலங்கள்) மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9-ன் அதிகாரபூர்வ வலைதளம் ஆகியவற்றில் வெளியிடப்படுகிறது.

2. தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும். தேர்தல் பற்றிய அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் தேர்தல் அதிகாரியால்
வெளியிடப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com