ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

5 லிட்டர் பச்சை பால் விலையுயர்வு ஏன்? ஆவின் விளக்கம்!

ஆவின் 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

News image
Updated On :12 ஆகஸ்ட் 2023, 10:33 am

DIN


ஆவின் 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

இதுகுறித்து ஆவின் நிறுவனம் கூறியது, 

ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வரும் பச்சை நிற பால் பாக்கெட் பொது மக்களுக்கு ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வணிக நிறுவனத்திற்காக விற்பனை செய்யப்படும் 5 லிட்டர் பால் ரூ.210-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

இந்நிலையில், வணிக நிறுவனத்திற்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ.10 உயர்த்தப்பட்டு, 5 லிட்டர் பாலின் விலை ரூ.220-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.