கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து ரத்து!

சுதந்திரநாளையொட்டி ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2023, 2:53 pm

சுதந்திரநாளையொட்டி ஆளுநர் மாளிகையில் நாளை (ஆக. 15) செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக இன்று (ஆக. 14) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

எனினும், கனமழை எச்சரிக்கை காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

மேலும், தேநீர் விருந்து நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.