புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆடி அமாவாசை: வேதாரண்யம், கோடியக்கரை கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசையையொட்டி, புனித நீராடிய மக்கள், தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்பணம்) செய்து புதன்கிழமை வழிபட்டனர்.

News image

ஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம் கடலில் புனித நீராடல் செய்த மக்கள்.

Updated On :16 ஆகஸ்ட் 2023, 5:37 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் ஆடி அமாவாசையையொட்டி, புனித நீராடிய மக்கள், தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்பணம்) செய்து புதன்கிழமை வழிபட்டனர்.

இங்கு ஆண்டு தோறும் தை, ஆடி அமாவாசை நாள்களில் நாட்டின் பல பகுதியிலிருந்தும் வரும் மக்கள்  நீராடல் செய்து, தங்களது முன்னோர்களை வழிபடுவது வழக்கம்.

நிகழாண்டு ஆடி அமாவாசை நாளான புதன்கிழமை அதிகாலை தொடங்கி நீராடல் நடைபெற்றது. 

கோடியக்கரை கடல் பகுதி முழுக்குத்துறையில் நீராடிய மக்கள் தங்களது முன்னோர்கள் தர்பணம் கொடுத்தனர்.

பின்னர் அவர்கள், அங்குள்ள சித்தர் பீடம், ராமர் பாதம் ஆகிய இடங்களில் வழிபட்டனர். 

இதேபோல், வேதாரண்யம் சன்னதிக் கடல் பகுதியிலும் மக்கள் நீராடி வழிபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.