மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க...!

இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஆகஸ்ட் 2023, 10:30 am

இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இது குறித்து உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் வரும் ஆக.21 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் “TNGASA2023-UG VACANCY”- என்ற தொகுப்பில் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.