நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி இந்தியா), ராஜஸ்தான் மாநிலத்துடன் 300 மெ.வாட் சூரிய ஒளி (மரபு சாரா எரிசக்தி) மின் திட்டத்திற்கான நீண்ட கால மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்திற்கு வெளியே முதன் முறையாக என்எல்சி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) இந்தியா லிமிடெட் நவரத்னா நிறுவனமாக விளங்குகிறது. தற்போது என்.எல்.சி. நிறுவனம் தமிழகத்தில் 1, 421 மெகாவாட் மரபுசாரா எரிசக்தியை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் 2030-க்குள் 6,031 மெ.வாட் திறனை அடைய திட்டமிட்டுள்ளது. இதை முன்னிட்டு இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு முகமையின் (ஐஆா்இடிஏ) இரண்டாம் கட்ட சூரியஒளி மின்சாரத்திற்கான குத்தகையில் என்.எல்.சி. பங்கேற்று 510 சோலாா் மெகாவாட் திறன் மின்சக்தி உற்பத்திக்கான குத்தகையைப் பெற்றது.
இதன்படி என்.எல்.சி. இந்தியா லிமிடெட் , ராஜஸ்தான் மாநிலம் பிகானீா் மாவட்டத்தில் பா்சிங்சாரில் 300 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தியை செயல்படுத்துகிறது. இதற்கு ராஜஸ்தான் மாநில அரசின் உா்ஜா விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் நீண்ட கால மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் என்எல்சி இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் மாநிலத்திற்கு சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்கான இந்த ஒப்பந்தம், கடந்த ஆகஸ்ட் 17 -ஆம் தேதி ஜெய்ப்பூரில் கையொப்பமானது. இதில் ராஜஸ்தான் உா்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் இயக்குநா் டி.கே.ஜெயினும், என்.எல்.சி. இந்தியா லிமிடெட் பொது மேலாளா் டி.பி.சிங் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 750 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, மொத்தப் பசுமை மின்சாரமும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ராஜஸ்தான் மரபுசாரா மின்சாரக் கொள்முதல் இலக்குகளை அடைகிறது. இந்த மரபுசாரா எரிசக்தியான சூரிய மின்சக்தி உற்பத்தியால் ஆண்டுக்கு 0.726 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவும் என மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பொறுத்த வரை, தமிழகம் தற்போது 1.40 ஜிகாவாட் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. என்எல்சி நிறுவனம் தமிழகத்தில் மட்டும் மரபு சாரா எரிசக்தியை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது மற்ற மாநிலங்களில் அதன் தடத்தை முதல் முறையாக விரிவுபடுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் தேர்தல்: ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!

'ஒரு நாள்' டிரைலர்!

தில்லி விமான நிலைய ஓடுபாதையை முடக்கிய கழுகு! தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட்டால்... சேகர்பாபு பதில்!
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

