கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடங்கும் பணி இன்னும் 4 மாதத்தில் தொடங்கி ஓராண்டுக்குள் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தின் பணி 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் விரைவில் திறக்கப்படவுள்ளது.
தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிமுக மாநாட்டிற்குத் தடையில்லை: மதுரைக் கிளை உத்தரவு
வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கம் அமைந்துள்ளதால், நகர்ப் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வருவோர் பெரும்பாலும் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும். இதனால், ஜிஎஸ்டி சாலையில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
அதன்படி, ரூ.20 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இன்னும் 4 மாதங்களில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இதனால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2-வது அரையிறுதி: இந்தியா பேட்டிங்!

13 ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய ‘ரோ - கோ’ மேஜிக்! 2024 டி20 உலகக் கோப்பை ரீவைண்ட்!!

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா படத்தின் டிரைலர்!

மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்த அன்புமணி ராமதாஸ்
வீடியோக்கள்

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் ஆர்ச்சரின் சவாலைச் சமாளிப்பாரா சஞ்சு ?
தினமணி வீடியோ செய்தி...

