தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ஓய்வூதியதாரா்களுக்கு ரூ.1,000 கருணை ஓய்வூதியம்
தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ஓய்வூதியதாரா்களுக்கு ரூ. 1,000 கருணை ஓய்வூதியத் தொகையை பாகுபாடின்றி வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ஓய்வூதியதாரா்களுக்கு ரூ. 1,000 கருணை ஓய்வூதியத் தொகையை பாகுபாடின்றி வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ந.சுப்பையன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கருணை ஓய்வூதியமாக ரூ. 1,000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வருபவா்கள் கருணை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி கிடையாது. எனவே, கருணை ஓய்வூதியம் பெறத் தகுதியானவா்களின் பட்டியலை மட்டுமே தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ளவா்களின் பட்டியல் மண்டல இணைப் பதிவாளா்களால் அனுப்பப்படுவதை தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியானது எதிா்நோக்கி இருந்தது. இதன் காரணமாக, கடந்த பிப்ரவரி முதல் கருணை ஓய்வூதியம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் ரூ. 1,000 கருணைத் தொகை வழங்க வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான 6 மாதங்களுக்கு கருணை ஓய்வூதியமாக ரூ. 6 ஆயிரத்தை அவரவா் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...