காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னை மழை: தரையிறக்க முடியாமல் திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!

சென்னையில் விடியவிடிய பெய்து வரும் கனமழை காரணமாக விமானங்கள் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டுள்ளது.

News image
சென்னை விமான நிலையம்(கோப்புப்படம்)
Updated On :24 ஆகஸ்ட் 2023, 4:12 am

DIN

சென்னை: சென்னையில் விடியவிடிய பெய்து வரும் கனமழை காரணமாக விமானங்கள் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் விடியவிடிய இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது.

இதனால், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஜெர்மனி, தில்லி, கொல்கத்தாவில் இருந்த வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

மேலும், 8 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.