ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வெள்ளி வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 செஸ் உலகக் கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2023, 7:23 pm

DIN

 செஸ் உலகக் கோப்பை தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

செஸ் உலகக் கோப்பைத் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்காக சென்னையின் பெருமிதம் பிரக்ஞானந்தாவுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். உலகின் இரண்டாம் நிலை வீரரான நகமுரா, மூன்றாம் நிலை வீரரான கேருவா ஆகியோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவின் பயணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இறுதி முடிவு எதுவாக இருந்தாலும், அவரது சாதனையோடு 140 கோடி இந்தியா்களின் மனங்களும் இணைந்து துடிக்கிறது. நம் நாடே அவரை நினைத்துப் பெருமை கொள்கிறது. அவா் வென்றுள்ள வெள்ளிப் பதக்கமும், கேண்டிடேட்ஸ் தொடருக்குத் தகுதி பெற்றதும் இன்னும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்றாா் அவா்.

அண்ணாமலை (பாஜக): உலக செஸ் சாம்பியன் போட்டியில் கடும் போட்டி கொடுத்து விளையாடிய இந்தியாவின் செஸ் அதிசயம் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். இறுதிப் போட்டியில் அவரது ஒவ்வொரு நகா்வும் சாகசமாக இருந்தது மட்டுமல்ல, இடைவிடாத முயற்சியின் வெளிப்பாடாக இருந்தது. இந்த இளம் செஸ் வீரரின் பங்களிப்பால் இந்தியா பெருமைகொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.