
திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலைக்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின் அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியர் மற்றும் பொதுமக்களிடம் முதல்வர் கலந்துரையாடினார்.
திருவாரூர் அருகே காட்டூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவாக தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் 12 கோடி ரூபாய் மதிப்பில், 7,000 சதுரஅடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டது.
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.