
மதுரையில் சுற்றுலா பயணிகளின் ரயில் பெட்டி தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் காவல் துறை விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
ரயில் பெட்டி தீப்பற்றி எரிந்தபோது ரயிலிலிருந்து தப்பிச்சென்ற சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
மதுரை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் ரயில் பெட்டி சனிக்கிழமை காலை 5 மணியளவில் தீப்பற்றி எரிந்தது.
ரயிலில் சமைத்து சாப்பிடுவதற்காக சமையல் எரிவாயு உருளைகள், 30 கிலோக்கும் அதிகமான விறகுகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் இருந்ததே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயில் பெட்டியில் உள்புறமாக இருந்து கதவை பூட்டிவிட்டு, தேநீர் தயாரிக்க சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக உயிர்த்தப்பிய பயணி தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துவரக்கூடாது என்ற விதிகளை மீறி சுற்றுலா பயணிகள் கேஸ் சிலிண்டர், விறகு உள்ளிட்டவற்றை எடுத்துவந்துள்ளனர். இததால், சுற்றுலா ஏற்பட்டாளர்களிடம் விசாரணை நடத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
தீ விபத்தின்போது சுற்றுலா நிறுவன உழியர்கள் 5 பேர் ரயிலிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.