காவிரியில் 24,000 கனஅடி தண்ணீர் திறக்க வலியுத்தப்படும்: அமைச்சா் துரைமுருகன்

காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 
அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்


காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23ஆவது கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்திற்கு உடனடியாக 5 ஆயிரம் கன அடி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து இன்று(ஆகஸ்ட் 29) நடைபெறும் காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர துரைமுருகன் கூறியது, 

காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும். வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி ஒழுங்காற்று ஆணையது கூறியது போதாது. 

45 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட ஆணையத்தில் வலியுறுத்தப்படும். தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் கிடைத்தால் தான் நன்றாக இருக்கும். 

தமிழ்நாட்டின் கோரிக்கையை நீர்வளத்துறை செயலாளர் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com