
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ரயில் நிலையம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்து இன்றுடன் 150 ஆண்டுகள் ஆகின்றதாம். இதனை சிறப்பிக்கும் வகையில் 150வது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாட ரயில்வே நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதையும் படிக்க.. சூப்பர் மூன் எனப்படும் பெரு நிலவு: இன்று வானில் தெரியும்!
அதன்படி, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ரயில் நிலையம் முழுவதும் கண்ணைக் கவரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுளள்து.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் 1873ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அதன் 150வது ஆண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.