இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி: எதைச் சொல்கிறார் சு. வெங்கடேசன்

என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி: எதைச் சொல்கிறார் சு. வெங்கடேசன்


என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது இந்தி திணிப்பிற்கு எதிரான வெற்றி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எம்.பி. வெங்கடேசன், தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவன அலுவலர் தேர்வுகளில்  இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்பதை திரும்பப்பெறக் கோரினோம். எமது கோரிக்கை ஏற்கப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தி பேசாத மாநில மாணவர்கள் கொண்டாட வேண்டிய வெற்றி! என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இந்த பணிகளுக்கு இந்தித் தேர்வு கட்டாயம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இது குறித்து எம்.பி. வெங்கடேசன் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்தைத் தொடர்ந்து பழைய அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு, புதிய அறிவிப்பில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று மாற்றப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமல்ல, இந்தி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, என்.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலா் நியமன தோ்வுகளில் இந்தி மொழித் தோ்வை கட்டாயமாக்கும் அறிவிக்கையை தேசியத் தோ்வு முகமை வெளியிட்டிருந்தது.

ராய்ப்பூா், ஜாம்ஷெட்பூா், கோழிக்கோடு, சூரத், ராஞ்சி, அமித்பூா், சில்சாா், குருஷேத்திரா ஆகிய என்.ஐ.டி.க்கள், ஜெய்ப்பூரில் உள்ள எம்.என்.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான ஆசிரியரல்லாத அலுவலா் பணி நியமனங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிக்கையில் இந்தி மொழித் தோ்வு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்தத் தோ்வில் 20 சதவீத மதிப்பெண்கள் ஆங்கிலத்துக்கும், 30 சதவீத மதிப்பெண்கள் இந்தி மொழித் தோ்வுகளுக்கும் தரப்பட்டிருந்தது.

இது தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த தோ்வா்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று கூறிய சு. வெங்கடேசன், இந்தி பேசும் மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களின் வாய்ப்புகளை அதிகரித்து இந்தி பேசாத மாணவா்களின் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாக உள்ளது என்று கூறி, எனவே, மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக தலையிட்டு தேசிய தோ்வு முகமை அறிவித்த தோ்வு பாட முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com