வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம்!

குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சிய சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை  சமஸ்கிருத மொழியில் மாற்றி மசோதா தாக்கல்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப்போராட்டம்
 
திருவள்ளூர்: இந்திய தண்டனை சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் இந்திய சாட்சிய சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 348 க்கு எதிராக இந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றி மசோதா தாக்கல் செய்துள்ளதை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கூட்டமைப்பு துணை தலைவர் வி.ஆர்.ராம்குமார் தலைமை வகித்தார். இதில் கூட்டமைப்பு துணைத்தலைவர் பி.விஜயகுமார் வரவேற்றார்.

மூத்த வழக்குரைஞர் எம்.வெங்கட்ரங்கம் போராட்டத்தை தொடக்கி வைத்தார். இதில் கூட்டமைப்பின் தலைவர் என்.மாரியப்பன் உண்ணாவிரதப் போராட்டத்தில் கண்டன உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்டவைகளை இந்தி சமஸ்கிருதத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்துள்ளதை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com