மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டிச.5-ல் ஆந்திரம் அருகே புயல் கரையைக் கடக்கிறது!

வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் டிசம்பர் 5-ம் தேதி காலை ஆந்திரம் அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image

ஆந்திரத்தில் கரையைக் கடக்கிறது புயல்

Updated On :1 டிசம்பர் 2023, 9:47 am


வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் டிசம்பர் 5-ம் தேதி காலை ஆந்திரம் அருகே  கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு ஆந்திரம் - வடதமிழகத்திற்கு வரும் 4-ம் தேதி புயல் வந்தடைகிறது. எனவே, ஆந்திரத்தின் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி காலை புயல் கரையைக் கடக்கிறது. 

முன்னதாக வடதமிழகம்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே டிச.4-ம் தேதி மாலை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் புயல் கரையைக் கடக்கும் இடம் மாறியுள்ளதால், கரையைக் கடக்கும் நேரமும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. டிச.2ல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி டிச.3ல் வங்கக்கடலில் புயலாக வலுப்பெற உள்ளது. 

புயல் ஆந்திரத்தை நோக்கி செல்வதால் தமிழகத்திற்கு பாதிப்பில்லையா? என்று கேட்டால், நிச்சயம் பாதிப்புள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 5-ம் தேதி வரை கன முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.