தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் 14 ரயில்கள் ரத்து!

மிக்ஜம் புயல் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் 14 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் 14 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 80 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 12 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை நோக்கி வந்த பல ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டு, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

இதனிடையே தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் 14 ரயில்களை முழுமையாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரயில்(22658),
மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில்(12638),
செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயில்(12662),
நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில்(20692),
கொல்லம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில்(20636),
கன்னியாகுமரி - சென்னை விரைவு ரயில்(12634),
செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில்(20684),
திருநெல்வேலி - சென்னை நெல்லை விரைவு ரயில்(12632),
தூத்துக்குடி - சென்னை முத்துநகர் விரைவு ரயில்(12694),
ராமேஸ்வரம் - சென்னை  விரைவு ரயில்(22662),
ராமேஸ்வரம் - சென்னை  விரைவு ரயில்(16752),
மதுரை - டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில்(12651),
திருச்செந்தூர் - சென்னை செந்தூர் விரைவு ரயில்(20606),
குருவாயூர் - சென்னை விரைவு ரயில்(16128)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com