காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னையில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் ரத்து!

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் முழுமையாகவும், 6 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
ரயில்
Updated On :4 டிசம்பர் 2023, 10:02 am

DIN

சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் முழுமையாகவும், 6 ரயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 88 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள், தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி பாலங்களில் நீர் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் நீலகிரி(12671) விரைவு ரயில், கோவை சேரன்(12673) விரைவு ரயில், போடிநாயக்கனூர்(20601) விரைவு ரயில், ஆலப்புலா(22639) விரைவு ரயில், மைசூரு காவேரி(16021) விரைவு ரயில், திருவனந்தபுரம்(12623) அதிவிரைவு ரயில், பெங்களூரு(12657) விரைவு ரயில், ஈரோடு ஏற்காடு(22649) விரைவு ரயில், பாலக்காடு(22651) விரைவு ரயில், பெங்களூரு(12027) விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Story image
Story image
Story image

அதேபோல், கொல்லத்திலிருந்து சென்னை எழும்பூர் வரும் 16102 ரயில், செங்கல்பட்டிலிருந்து காச்சிகுடா விரைவு ரயில்(17651) விரைவு ரயில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர் வரவேண்டிய 6 ரயில்கள் காட்பாடி, அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சென்னையிலிருந்து திருப்பதி, பெங்களூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.