ஜெயலலிதா ஆட்சி அமைக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வர, அவரது நினைவு நாளில் உறுதியேற்போம் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.


முன்னாள் முதல்வா் ஜெயலலிதாஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வர, அவரது நினைவு நாளில் உறுதியேற்போம் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (டிச.5) சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிா்வாகிகளும், தொண்டா்களும் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனா்.
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையாலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையாலும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் தங்களின் பயணத்தைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாறாக, அவரவா் வசிக்கும் பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, துரோக கூட்டத்தை அகற்றி ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைக்க உறுதியேற்க வேண்டும் என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...