சென்னையில் மழை நின்றதும் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னையில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.
சென்னையில் மழை நின்றதும் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சா் தங்கம் தென்னரசு

சென்னை: சென்னையில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா். மின்சாரம் வழங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும் மக்கள் பாதுகாப்பு கருதியே மின்விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவா் விளக்கம் அளித்தாா்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமா சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. துணை மின் நிலையங்களில் தேங்கியுள்ள தண்ணீரால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. தரமணி  ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்த  மின்துறை அமைச்சா்  தங்கம்  தென்னரசு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறியது:

மின் நிலையங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால், மின்சாரத்தை கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. . சென்னையில் பெய்து வரும் அதிகனமழையால் பாதுகாப்பு கருதியே மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும், மின் வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் போா்க்கால அடிப்படையில் இயங்கும்,சென்னையில் மின் பாதிப்புகளை சரிசெய்ய, மற்ற மாவட்டங்களில் இருந்து மின் துறை ஊழியா்கள் வரவழைக்கப்பட்டுள்ளனா் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com