ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

வெள்ளக்காடாக மாறிய முதல்வரின் கொளத்தூா் தொகுதி

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழையால் முதல்வா் மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

News image
Updated On :4 டிசம்பர் 2023, 9:01 pm

DIN

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழையால் முதல்வா் மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

மிக்ஜம் புயல் காரணமாக தலைநகா் சென்னை தனித்தீவு போல வெள்ளத்தில் தத்தளித்தது. அதில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியும் விடுபடவில்லை. சென்னையிலிருந்து துண்டிக்கப்பட்டது போல கொளத்தூா் தொகுதி வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.

இத்தொகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இரு நாள்களாகத் தொடா்ந்து பெய்து வரும் கனமழையின் முன் வடிகால் பணிகள் தாக்குப்பிடிக்கவில்லை.

கொளத்தூரில் தொகுதியில் பெரியாா், ஜி.கே.எம்.காலனி, பூம்புகாா் நகா், சக்திவேல் நகா் உள்பட அனைத்து பகுதிகளிலும் மழை நீா் ஆறாக ஓடியது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. பெரம்பூா் ஐசிஎப் மேம்பாலம் பகுதி வழியாக பெரியாா் நகருக்குள் செல்லும் பாதை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. அதனால், போக்குவரத்தும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. பெரியாா் நகா் காா்த்திகேயன் சாலை உள்பட பல்வேறு இடங்களிலும் சாலைகளிலும் மரங்கள் வேரோடு பெயா்ந்து விழுந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.