மழையில் சரிந்து விழுந்த மரம். இடம்: மந்தைவெளி
மழையில் சரிந்து விழுந்த மரம். இடம்: மந்தைவெளி

மழை பாதிப்பு: புகார்கள் மீது உடனடி நடவடிக்கை!

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
Published on


புயலால் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மழை பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையர், மழையால் பாதிக்கப்படுள்ள இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

குறுகிய நேரத்தில் சென்னை மாநகரம் முழுவதும் அதிக அளவில் கனமழை பெய்தது. அனைத்து தரப்பினரும் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனக் குறிப்பிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com