தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி !

லஞ்சம் பெற்ற வழக்கில் ஜாமீன் வழங்க கோரி அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

News image

கைது செய்யப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி | திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம்.

Updated On :5 டிசம்பர் 2023, 7:18 am

DIN

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த வெள்ளிக்கிழமை(டிச.1) கைது செய்யப்பட்டார். மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர், விசாரணைக்கு பின் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை டிச.15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெ.மோகனா உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட அங்கித் திவாரி, சிறைத் துறை அதிகாரிகளின் பரிந்துரைப்படி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

ஜாமீன் கோரி மனுத் தாக்கல்: 

இந்த நிலையில் அங்கித் திவாரி தரப்பில் ஜாமீன் வழங்க கோரி, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஜாமீன் மனு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் தரப்பில், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினரின் வாதங்களை ஏற்று, அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை  தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா தள்ளுபடி செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.