அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஒரே நாளில் ரூ.1000 குறைந்த தங்கம் விலை!

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :5 டிசம்பர் 2023, 7:07 am

DIN

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.5975-க்கும், சவரனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ. 47,800-க்கும் விற்பனையானது. இந்த விலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக அமைந்தது. குறிப்பாக, கடந்த 6 நாள்களில் சவரனுக்கு ரூ. 1,500 அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச.5) சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ரூ. 2.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 81.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.81,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டி வீதத்தை இனி உயா்த்த வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு சா்வதே அளவில் சரியத் தொடங்கியுள்ளது. மதிப்பேற்றம் அடிப்படையில் தற்போதைக்கு தங்கம் மட்டுமே சிறந்த முதலீடாகக் கருதப்படுவதால் அதை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தங்கம் இருந்தால் தைரியமாக தொழில் தொடங்கலாம், வீடு கட்டலாம்; வங்கிகளில் தங்கத்தின் மீதான கடன் வட்டி குறைவு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் தங்கத்தை சிறந்த முதலீடாகக் கருதுகின்றனா். இதனால்தான் அதன் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.