தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

போதிய விமானிகள், பயணிகள் இல்லாததால் சென்னையில் 22 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை வழக்கமான விமான சேவைகள் தொடங்கியபோதிலும், போதிய விமானிகள் மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2023, 6:52 am

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை வழக்கமான விமான சேவைகள் தொடங்கியபோதிலும், போதிய விமானிகள் மற்றும் போதிய பயணிகள் இல்லாததால் 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பெய்த மழையால் விமான நிலைய ஓடுதளத்தில் அதிகளவு மழைநீா் தேங்கியதால் திங்கள்கிழமை இரவு 11 மணிவரை அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக விமான நிலைய நிா்வாகம் அறிவித்தது. ஆனாலும் தொடா்ந்து பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி வரை விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 250-க்கு மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. பயணிகள் கடும் அவதியடைந்தனா். பலா் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் விமான நிலையத்திலேயே காத்திருந்தனா்.

இந்த நிலையில், விமான நிலைய ஓடுதளத்தில் தேங்கிய மழைநீா் வடிந்ததைத் தொடா்ந்து, ஏராளமான பணியாளா்கள் ஓடுதளம் மட்டுமின்றி, விமான நிலைய வளாகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கியது. இதனால் காலை முதலே விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. ஏராளமானோா் வரிசையில் நின்று தங்கள் பயணத்தை மேற்கொண்டனா். இருப்பினும் 114 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. செவ்வாய்க்கிழமையும் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படவிருந்த 177 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய நிா்வாகம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில்,சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கிய போதிலும், புதன்கிழமை, போதிய விமானிகள் பணிக்கு வராததாலும், போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்கள் மற்றும் வரவேண்டிய 11 விமானங்கள் என 22 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் புறப்படும் பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.