கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மிக்ஜம் புயல் பாதிப்பு: நாளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்!

முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்திக்கவுள்ளார். 

News image
Updated On :6 டிசம்பர் 2023, 2:45 pm

சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிச.7) நேரில் பார்வையிடவுள்ளார். 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்திக்கவுள்ளார். 

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. 

Story image

பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மிக்ஜம் புயல் மழைக்கு சென்னையில் கடந்த இரு நாள்களில் மட்டும் 19 போ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்டவற்றை சரி செய்யவும் சீரமைப்புப் பணிகளுக்காகவும் நிதி வழங்கி உதவுமாறு தமிழ்நாடு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

Story image

இந்நிலையில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை (டிச. 7) தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடவுள்ளார். 

அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலினையும், அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.