மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக அரசும், அமைச்சர்களும் சென்னை மக்கள் மீது அக்கறை காட்டவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக அரசும், அமைச்சர்களும் சென்னை மக்கள் மீது அக்கறை காட்டவில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

News image
Updated On :9 டிசம்பர் 2023, 11:11 am

DIN

திமுக அரசும், அமைச்சர்களும் சென்னை மக்கள் மீது அக்கறை காட்டவில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மிக்ஜம் புயல் பாதிப்புக்கு அரசின் அலட்சியமே காரணம். பெரும்பாலான பகுதிகளில் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. புயல் பாதிப்பு தொடர்பாக திமுக ஆட்சியில் முன்கூட்டியே அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

மண்டல வாரியாக முறையாக அதிகாரிகளை நியமித்து ஆலோசனைகளை அரசு வழங்கவில்லை. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி மக்கள் அவதியடைந்தனர். திமுக மாநாட்டிற்கு செலவுசெய்த நேரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை பார்த்திருந்தால் நீர் தேங்கியிருக்காது. 

மழை பெய்தால் ஒரு சொட்டு கூட தேங்காது என அரசு கூறியது, ஆனால் குளம் போல் மழை நீர் நின்றது. மழைநீர் வடிகால் பணிகள் குறித்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுக அரசும், அமைச்சர்களும் சென்னை மக்கள் மீது அக்கறை காட்டவில்லை. வடிகால்வாய் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.