விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்!
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து தேமுதிக நிறுவனத் தலைவரும், தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பூரண குணமடைந்து திங்கள்கிழமை(டிச.11) வீடு திரும்பினார்.
தீவிர இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் தனியாா் மருத்துவமனையில் விஜயகாந்த் கடந்த நவ.18 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்துறை மருத்துவக் குழு சிகிச்சையளித்து வந்தனர்.
இந்த சூழலில் விஜயகாந்த் உடல் நலம்பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அந்த கட்சியினா் பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு செய்தனா். தேவாலயம் மற்றும் பள்ளிவாசலில் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.
இதையும் படிக்க | 9 நாள்களுக்கு பின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு!
இந்த நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், “விஜயகாந்த் ஆரோக்கியமாக இருக்கிறார். நல்ல உடல் நலத்துடன் இரண்டு மூன்று நாள்களில் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் பூரண குணமடைந்து திங்கள்கிழமை(டிச.11) வீடு திரும்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

