நரிக்குறவ சமுதாய மக்களுக்கு 48 வீடுகள்: கே.என். நேரு திறந்துவைத்தார்

வெள்ளக்கல்பட்டியில் சுமார் 2.21 கோடி மதிப்பீட்டில் நரிக்குறவர் சமுதாய மக்களுக்காக கட்டப்பட்ட  48 வீடுகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.
நரிக்குறவ சமுதாய மக்களுக்கு 48 வீடுகள்: கே.என். நேரு திறந்துவைத்தார்

சேலம்: வெள்ளக்கல்பட்டியில் சுமார் 2.21 கோடி மதிப்பீட்டில் நரிக்குறவர் சமுதாய மக்களுக்காக கட்டப்பட்ட  48 வீடுகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்கள் சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஆரூர்பட்டி ஊராட்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வெள்ளக்கல்பட்டி நரிக்குறவர் குடியிருப்பில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 48 வீடுகளைத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பேசும்போது, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியின்போது முதன்முதலாக தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர். ஒன்றிய அரசின் துணையோடு ஒவ்வொரு ஊராட்சியிலும் வீடுகள் கட்டித்தரப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மீண்டும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு ஓடுகள் போட்டு கட்டப்பட்ட வீடுகளை மாற்றித் தந்தார்கள்.

தற்போது முதல்வர், ஓட்டு வீடுகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் இணைத்து வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றையதினம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகலயின் சார்பில் சேவம் மாவட்டம், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம். ஆரூர்பட்டி ஊராட்சியில் வெள்ளக்கல்பட்டி நரிக்குறவர் குடியிருப்பில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் 48 வீடுகள் புதியதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.

மேலும், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்படும். இதனை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com