பால் தடுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை: ஆவின்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலைமுதலே தொடர் கனமழை பெய்துவருவதால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரித்துள்ளது. 

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பால் பவுடர், பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

வெளிமாவட்டங்களிலிருந்தும் கூடுதலாக பால் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்திலும் போதிய அளவு பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com