தென் தமிழகத்தின் 19 ரயில்கள் ரத்து! முழு விவரம்

தென் மாவட்டங்களில் இயக்கப்படும் 19 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: தென் மாவட்டங்களில் இயக்கப்படும் 19 ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் பெய்து வரும் கனமழை காரணமாக தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ரயில்கள் அங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, நெல்லை – சென்னை வந்தே பாரத், திருச்செந்தூர் – பாலக்காடு, நெல்லை – ஜாம் நகர், நிஜாமுதீன் ரயில், சென்னை - திருச்செந்தூர்(20605), திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயிலும்(22628) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று இயக்கப்பட இருந்த மேலும் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

1. 06685 - திருநெல்வேலி - செங்கோட்டை(முன்பதிவு இல்லா ரயில்)
2. 06642 - திருநெல்வேலி - நாகர்கோவில்(முன்பதிவு இல்லா ரயில்)
3. 06682 - செங்கோட்டை - திருநெல்வேலி(முன்பதிவு இல்லா ரயில்)
4. 06681 - திருநெல்வேலி - செங்கோட்டை(முன்பதிவு இல்லா ரயில்)
5. 06679 - வாஞ்சிமணியாச்சி - திருச்செந்தூர்(முன்பதிவு இல்லா ரயில்)
6. 06684 - செங்கோட்டை - திருநெல்வேலி(முன்பதிவு இல்லா ரயில்)
7. 06687 - திருநெல்வேலி - செங்கோட்டை(முன்பதிவு இல்லா ரயில்)
8. 06680 - திருசெந்தூர் - வாஞ்சிமணியாச்சி(முன்பதிவு இல்லா ரயில்)
9. 06658 - செங்கோட்டை - திருநெல்வேலி(முன்பதிவு இல்லா ரயில்)
10. 16787 - திருநெல்வேலி - ஸ்ரீ வைஸ்னவ் தேவி காட்ரா
11. 16788 - ஸ்ரீ வைஸ்னவ் தேவி காட்ரா - திருநெல்வேலி
12. 16791 - திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி
13. 16862 - கன்னியாகுமரி - புதுச்சேரி

மேலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 13 ரயில்கள் மதுரை, திண்டுக்கல் மற்றும் திருவனந்தபுரம் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படவுள்ளது. 

செங்கோட்டை - தாம்பரம் (20684) ரயில் தென்காசி, ராஜபாளையம் மற்றும் விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com