மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ஆட்சியர் அலுவலகத்திற்குள் வெள்ளம்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

News image

ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த வெள்ளநீர்

Updated On :18 டிசம்பர் 2023, 3:57 am

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வாளாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Story image

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

Story image

இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்து தாமிரவருணி ஆற்று நீர், ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.