காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தென் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும்!

கனமழை காரணமாக தென் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2023, 11:11 am

DIN

கனமழை காரணமாக தென் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து இயக்கப்படும் 9 ரயில்களின் விவரம்:

1. 22667 நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயில் 
2. 12634 கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில் 
3. 22658 நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில்
4. 17236 நாகர்கோவில் - எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில்
5. 11022 திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில்
6. 16235 தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்
7. 20606 திருச்செந்தூர் - மைசூர் அதிவிரைவு ரயில்
8. 12632 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில்
9. 12694 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்

Story image

முன்னதாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 13 ரயில்கள் மதுரை, திண்டுக்கல் மற்றும் திருவனந்தபுரம் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.