வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம்.
Updated On :6 பிப்ரவரி 2024, 1:30 pm

DIN

சென்னை: முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி சபரிமலைக்கு சென்ற சி.வி.சண்முகம் சாமி தரிசனம் செய்து வீடு திரும்பியபோது காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சி.வி.சண்முகத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, உடல்நலக் குறைவு காரணமாக சி.வி.சண்முகம் ஆஜராகவில்லை என்று அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.