சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
மேலும், மேல்முறையீடு செய்ய வசதியாக நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள்கள் காலஅவகாசமும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து பொன்முடி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவர் வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வழக்கு குறித்து பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிக்க | பொன்முடி சொத்துகளை முடக்க அவசியமில்லை: உயர்நீதிமன்றம்
தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின், நேற்றிரவுதான் சென்னை திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

