
மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தாருக்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறினர்.
விஜயகாந்த் உடல் கண்ணாடிப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்ததைக் கண்டு, நடிகர் விஜய் இரண்டு நிமிடங்கள் உடைந்து அழுதார். விஜயகாந்த் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.
விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முக்கிய திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். விஜயகாந்த்தை வைத்து அதிக திரைப்படங்கள் இயக்கிய இயக்குநர்களில் ஒருவர் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். மேலும், நடிகர் விஜய்யுடன் இணைந்து திரைப்படங்களிலும் விஜயகாந்த் நடித்துள்ளார்.
விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் நள்ளிரவிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை சென்னை தீவுத்திடலில் வைக்கப்படவுள்ளது.
பிற்பகல் தீவுத்திடலிலிருந்து புறப்பட்டு, இறுதிச் சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.